News April 9, 2025
தென்காசி : பூச்சி கடித்து மூதாட்டி பலி

கடையம் அருகே மேல குத்த பாஞ்சான் பகுதியை சேர்ந்த சித்திரை வடிவு(65) என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 24, 2025
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவருடைய மனைவி சீதாலட்சுமி (29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சீதாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கணவருக்கும் சரிவர வேலை இல்லாத நிலையில் தனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News April 23, 2025
தென்காசி: அரசு பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்

தமிழக அரசின் புதிய திட்டமான, தமிழக பேருந்துகளில், யு.பி.ஐ (UPI) மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளும் முறை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலும், தென்காசி, சங்கரன்கோவில் டிப்போவில் இருந்து வரும் பேருந்துகளில் UPI மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
News April 23, 2025
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.