News November 15, 2024
தென்காசி புத்தகத் திருவிழா: 10 நாள் இலவச பேருந்து வசதி

தென்காசி ஐசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று(நவ.,15) முதல் நவ.,24ஆம் தேதி வரை 3வது பொதிகை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு வரும் மாணவர்களின் வசதிக்காக அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், பாபநாசம் 5 பணிமனைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News March 3, 2026
தென்காசி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 3, 2026
தென்காசியில் போட்டியிட நகரமன்ற தலைவர் விருப்ப மனு

திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு வரும் மார்ச் 6 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், திமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்.
News March 3, 2026
தென்காசி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி.!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேதராஜ் (52). இவர் திருச்செந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (மார்ச்.2) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


