News January 18, 2026

தென்காசி: பீர் பாட்டிலால் ஓட்டுநரின் மண்டை உடைப்பு

image

கடையம் அருகே வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேக் (30). மினி பஸ் டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மது பாரில் மது அருந்த சென்றார். அப்போது கிழ கடையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் பீர் பாட்டிலால் சுவேக் தலையில் அடித்ததில், அவரது மண்டை உடைந்து தென்காசி GH-ல் அனுமதிக்கப்பட்டார். கடையம் போலீஸார் சரவணக்குமாரை கைது செய்தனர்.

Similar News

News April 7, 2026

தென்காசி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>இந்த இணையதளத்தில் <<>>புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 7, 2026

தென்காசி: பைக் மோதிய விபத்தில் முதியவர் பலி

image

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், காமராஜ் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த மர வேலை செய்து வந்த சோமசுந்தரம் (70) , கீழப்பாவூர் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சைக்கிளில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 19 வயது கல்லூரி மாணவர் ராம்குமார் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 7, 2026

ஆலங்குளம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

ஆலங்குளம் அருகே இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் மணிகண்டன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!