News April 21, 2024

தென்காசி: பீடி தொழிலாளி மகள் ஐஏஎஸ்

image

செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பீடித் தொழிலாளி ஸ்டெல்லாவின் மகள் இன்பா சிவில் சர்வீஸ் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.    இன்று அவரை சிபிஐ எம்எல் மற்றும் தென்காசி மாவட்ட ஜனநாயக பீடி தொழிலாளர் சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட செயலாளர் புதியவன் (எ) சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டினர்.

Similar News

News August 20, 2025

தென்காசி மாவட்டத்தில் 5 கல்குவாரிகள் விதிமீறல்

image

தென்காசி மாவட்டத்தில் சில கல்குவாரிகள் விதி மீறலில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர் ஜமீன் தொடுத்திருந்த வழக்கிற்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் இருந்து எட்டு கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டு கல்குவாரியிலிருந்து அபராத தொகை பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

தென்காசி அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

தென்காசி மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற Toll-Free எண் (அ) 94875 99080 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். *ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

தென்காசி மாவட்ட இஎஸ்ஐ குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட இஎஸ்ஐ குறைதீர் கூட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் வருகிற 28ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்ட இ எஸ் ஐ மற்றும் பி எப் சார்ந்த உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவோர் தொழில் அதிபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்யலாம் என மண்டல ஆணையாளர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!