News March 21, 2024

தென்காசி பாஜக அலுவலகத்தில் சமகவினருக்கு வரவேற்பு

image

தென்காசி சட்டமன்றத் தேர்தல் அலுவலகத்தில் இன்று மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.        நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட சமத்துவ கட்சியின் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நகர நிர்வாகிகளை பாஜகவினர் வரவேற்றனர்.

Similar News

News April 17, 2025

கடையம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிள்ளை குளத்தை சேர்ந்த முத்துராஜ் மகள் ஜோதி தர்ஷினி (17) 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது தனது அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் பார்த்தபோது இறந்து கிடந்தார். கடையம் போலீசார் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2025

தென்காசி பயணிகளுக்கு குட் நியூஸ்

image

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி QR கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தென்காசி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

error: Content is protected !!