News May 20, 2024
தென்காசி: பழைய குற்றாலத்தில் மீண்டும் மழை

தென்காசி, பழைய குற்றாலம் பகுதியில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றாலம் அருவி மற்றும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
Similar News
News September 7, 2025
தென்காசி வழியாக சிறப்பு ரயில் அட்டவணை வெளியீடு

தென்காசி வழியாக திருநெல்வேலி – சிவமோகா டவுண் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஞாயிறுதோறும் நெல்லையில் இருந்தும், திங்கள்தோறும் சிவமோகாவில் இருந்தும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரயில், பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, சேலம், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

இன்று (செப்டம்பர் 7) காலை 7 மணி நிலவரப்படி கடனா அணை நீர் இருப்பு 57 அடியாக உள்ளது. அணைக்கு 52 கான அடி நீர் வருகிறது. 85 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 62 அடி, கருப்பாநதி அணை நீர் இருப்பு 54 அடி, குண்டாறு அணை நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் 21 அடி, அடவி நைனார் அணை நீர் இருப்பு 127 அடியாக உள்ளது.
News September 7, 2025
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.64,480 சம்பளம்! நாளை கடைசி!

தென்காசி மக்களே, ரெப்கோ வங்கியில் (Repco Bank) உள்ளூர் சேவை அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 21 வயது நிரம்பிய டிகிரி முடித்தவர்கள் <