News October 21, 2025

தென்காசி: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

தென்காசி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY

image

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 14, 2026

தென்காசி: பெண் ஊழியர் பாலியல் வழக்கில் வாலிபருக்கு சிறை

image

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பராக 2023ல் பணிபுரிந்த பெண் ஊழியரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய பெண் ரயில்வே போலீசில் புகாரளித்தார். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த அனீஸ் (27) என்பது தெரியவந்தது. இந்த வழக்கு நேற்று தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News February 14, 2026

தென்காசி: கடையம் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

கடையம் அருகே பிள்ளைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால் மதுபழக்கத்தை விட முடியவில்லை எனக்கூறி மீண்டும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கடையம் போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!