News May 20, 2024
தென்காசி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஒட்டப்பட்ட போஸ்டரில் கீழப்பாவூர் மற்றும் ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவரின் முறைகேடுகள் அதிகாரிகள் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் முடிவு என்ன? தலைவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 9, 2026
தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 9, 2026
தென்காசி: பெண்ணுக்கு சரமாரி கத்தரிக்கோல் குத்து.!

தென்காசி மலையான் தெருவைச் சோ்ந்தவா் மா.சொா்ணம் (28). விவாகரத்தானவா். இவரும், இவரது உறவினரான பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுரேஷூம் (35) காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொா்ணம், சுரேஷை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் சொா்ணத்தை, கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சொா்ணம் திருநெல்வேலி GH ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News March 9, 2026
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


