News May 18, 2024
தென்காசி: நாளை ரெட் அலர்ட்
தென்காசி மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தென்காசியில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2024
செங்கோட்டை அருகே இலவச பயிற்சிக்கு அழைப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
News November 20, 2024
குண்டாறு அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை!
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.,19) மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக, செங்கோட்டையில் உள்ள குண்டார் அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணை பகுதியில் 7 மி.மீட்டர் மழையும், கருப்பா நதியில் 9 மி.மீட்டர், ராமநதியில் 12 மில்லி மீட்டர், கடனா அணையில் 5 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
தென்காசி மாவட்டத்தில் மழை தொடரும்!
தென்காசி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.