News September 1, 2025
தென்காசி: நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து

கடையநல்லூர் தாலுகா, வேலாயுதபுரத்தில் இருந்து மங்களாபுரம், கடையநல்லூர் செல்லும் சாலையில் சாம்பவர் வடகரை மேலூரை சேர்ந்த சீனிவாசன் என்ற முதியவரும் அவர் மனைவியும் இருசக்கர வாகனத்தில் வரும் போது நாய் குறுக்கே வந்து மோதியதால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Similar News
News September 2, 2025
தென்காசி கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா??

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு தென்காசி மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்க <
News September 2, 2025
தென்காசியில் அரசு வேலை APPLY NOW!

ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேல நீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் அலுவலக உதவியாளர் இரவு காவலர் பணியிடங்களை இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது செப்டம்பர் 1ம் தேதி 31 வரை விண்ணப்பிக்கலாம்.
News September 2, 2025
தென்காசி – பெங்களூர் ரயில் சிறப்பு சேவை மேலும் நீட்டிப்பு

திருநெல்வேலி – தென்காசி – மதுரை வழியாக பெங்களூருக்கு சுதந்திர தினத்தை ஒட்டி விடப்பட்ட சிறப்பு ரயிலை (06103/04) நீட்டிக்க பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்த் அய்யாசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று தென்னக இரயில்வே அடுத்த எட்டு வாரங்களுக்கு (செப்-07 – அக்.27) வரை ரயில் சேவையை நீட்டிக்க அறிவித்துள்ளது. (முன்பதிவு செப்- 02 ல் தொடக்கம்) *ஷேர் பண்ணுங்க