News August 5, 2025

தென்காசி: நாய் கடித்து 3 பேர் காயம்

image

தென்காசி, கடையநல்லூர் மக்கா நகர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்தனர். 3வரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை தெருநாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடையநல்லூர் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

Similar News

News December 13, 2025

தென்காசி: வக்கீல் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

image

தென்காசியில் கடந்த 3ஆம் தேதி முத்துக்குமாரசாமி (46) என்ற வழக்கறிஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பிரமணியனை (48) தேடி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4ம் தேதி நாமக்கல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதில் தற்கொலை செய்து கொண்டவர் சிவசுப்பிரமணியன் என தெரியவந்தது. அவரது உறவினா்கள் நேரில் உறுதிப்படுத்திய பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

News December 13, 2025

தென்காசி: மாணவிகள் கவனத்திற்கு.., கவலை வேண்டாம்

image

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஏராளமான மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு சிலர் இடையூறு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிவகிரி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு எவரேனும் தொந்தரவு அளித்தால் அவர்களிடமோ, காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News December 12, 2025

கடையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

கடையம் அருகே மாதாபுரம் தோரணமலை பகுதியைச் சேர்ந்த ஐயன் கண்ணு என்ற தங்கப்பாண்டி இன்று ராமநதி அணைக்கு செல்லும் வழியில் தனது தோட்டத்தில் பீஸ் கேரியரை எடுத்து மாட்டிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!