News February 20, 2025

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்

image

தென்காசி நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜா முகமது. இவர் நகராட்சி பணத்தை கையாடல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், நகராட்சி பணம் ரூ.28 லட்சம் கையாடல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்த சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News July 8, 2025

தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

News July 8, 2025

10 ஆம் வகுப்பு போதும் – ரயில்வேயில் வேலை

image

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!