News October 17, 2025

தென்காசி நகரப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு – எஸ்பி

image

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட ரத வீதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசலின் போது கவனமாக செல்ல வேண்டும் என்று மாவட்ட எஸ்பி அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 19, 2025

தென்காசி மக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

image

தென்காசி மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக மின்கம்பங்கள் மின் மாற்றிகள் உள்ள இடங்களில் வானை நோக்கி செல்லும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மற்ற பட்டாசுகளையும் மின்கம்பங்கள் அருகே வைத்து வெடிக்க கூடாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News October 19, 2025

தென்காசிக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை அறிவிப்பு

image

தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 21ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும். இதனால் தென்காசி, திருநெல்வேலி நீலகிரி, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News October 19, 2025

தென்காசி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

தென்காசி மாவட்ட மக்களே இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!