News August 19, 2025
தென்காசி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் அரசு குரு பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு மேலும் விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055800, 9488845666 எண்ணிற்கும், தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.
Similar News
News September 12, 2025
செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று இங்கு மட்டும் இயக்கம்

செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் – கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஈரோடு – கரூர் இடையே பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் ரோட்டில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை- திண்டுக்கல் இடையே (செவ்வாய் தவிர) ஏற்கனவே ரத்து செய்யபட்டுள்ளது.
News September 12, 2025
தென்காசி: மூதாட்டியிடம் நகை திருட்டு

தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மகாலட்சுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர் தலைவலி தைலம் தடவிவிடுவதாகக் கூறி, மூதாட்டி அணிந்திருந்த நகைகளைக் கழற்றி கீழே வைக்கச் சொல்லியிருக்கிறார். நகைகளைக் கழற்றி வைத்ததும், அவற்றை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 12, 2025
தென்காசி: ரூ.99 ஆயிரம் சம்பளத்தில் RBI வேலை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)-ல் 120 கிரேட் பி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்த நபர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சம்பளம் 55,200 – 99,750 வரை வழங்கபடுகிறது. செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இங்கு <