News October 20, 2025
தென்காசி: தீபாவளி மகிழ்ச்சி தொடரும் எண்கள் இதோ!

தென்காசி மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலைய எண்கள் (தென்காசி 04633222166, ஆலங்குளம் 04633272101, சங்கரன்கோவில் 04636222509, செங்கோட்டை 04633233200, சுரண்டை 04633261699, கடையநல்லூர் 04633240301, வாசுதேவநல்லூர் 04634241238) மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க..!
Similar News
News October 20, 2025
தென்காசி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!
News October 20, 2025
திருமலை குமார் சாமி கோயிலில் கொடியேற்றம்

பண்பொழி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமலைக் குமாரசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவானது கொடியேற்றத்துடன்(அக்20) இன்று வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்வினை முன்னிட்டு திருமலைக் குமாரசாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
News October 20, 2025
தென்காசி: மாமிச கடைகளில் அலைமோதிய கூட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இன்று தீபாவளியை முன்னிட்டு மட்டன் மற்றும் சிக்கன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் இன்று காலை அனைவரும் கடைகளுக்கு மாமிசம் வாங்க வந்தனர். இதனால் மட்டன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் வரிசையில் நின்று மட்டன்களை வாங்கிச சென்றனர்.