News January 1, 2025
தென்காசி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பரிசளிப்பு விழா

தென்காசி மாவட்டம், பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
Similar News
News December 26, 2025
தென்காசி: அரசு பேருந்தில் பிரேக் கோளாறால் விபத்து…

அம்பையில் இருந்து கடையம் அருகே உள்ள பெத்தாபிள்ளை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கடனாநதி அருகே சென்ற போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் அன்பரசனின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் பார்வதி (67), சூரியகவி (65), அமராவதி (67), ஜானகி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.
News December 26, 2025
தென்காசி: அச்சத்தில் விவசாயிகள்!

ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூர் மலையடிவார கிராமத்தில் மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து நேற்று அட்டகாசம் செய்ய தொடங்கியுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 6க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியை சேர்ந்த பீட்டர், அருள்தாஸ், வின்சென்ட் தோட்டங்களில் நுழைந்து 80க்கும் மேற்பட்ட தென்னை, மா, பனை உள்ளிட்ட மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன.
News December 26, 2025
தென்காசி: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

தென்காசி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <


