News May 24, 2024
தென்காசி: சீமை கருவேல மரங்களை அகற்ற அழைப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அனுமன் நதிக்கரையில் அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் உள்ளன. இதனை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பாக நாளை 25ஆம் தேதி அகற்றி நாட்டு மரங்கள் நட உள்ளது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க தன்னார்வலர்கள் மற்றும் சமூக இயற்கை நல அலுவலர்கள் கலந்து கொள்ளுமாறு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் – ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் ஜுலை 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை நாளை (08.07.2025) தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. குறைகேட்பு முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
News July 7, 2025
சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி பெண் பலி

தென்காசி முதலியார் தெருவை சேர்ந்தவர் குருநாதன் (60). இவரது மனைவி தும்பி அம்பாள் (55). சங்கரன் கோவில் – நெல்லை சாலையில் நவ நீதகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே தும்பி அம்பாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் தும்பியம்மாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 70 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 36 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 69 அடி. கருப்பாநதி அணை நீர் இருப்பு 65 அடி. குண்டாறு அணை நீர் இருப்பு 36 அடி. இந்த அணைக்கு வரும் 18 கான அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 127 அடியாக உள்ளது.