News April 6, 2026
தென்காசி: சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. காமுகன் கைது

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு மீனாட்சிபுரம் சாலையில் தங்கதுரை என்ற நபருக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒரு குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டு காலமாக தங்கி பணியாற்றி வந்த நிலையில், அந்த குடும்பத்தின் 13 வயது சிறுமிக்கு தங்கதுரை பாலியல் தொல்லைஅளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பள்ளி ஆசிரியை மூலம் அளித்த புகாரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 11, 2026
தென்காசி: 10th போதும்.. ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <
News April 11, 2026
ஆலங்குளத்தில் நடிகர் ராமராஜன் பிரசாரம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக விபின் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் ராமராஜன் இன்று தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் நடிகர் ராமராஜன் ரசிகர் மன்றத்தினர் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.
News April 11, 2026
தென்காசி: ஆலங்குளத்தில் 226 பேர் மீது வழக்குப்பதிவு

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்த பனைத்தொழிலாளி மணிகண்டன் மீது SI இசக்கிராஜா துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதை கண்டித்து நாதக வேட்பாளர் பால்ராஜ், MP ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 14 பெண்கள் உட்பட 226 பேர் மீது சட்டவிரோத கூடுகை, சாலை மறியல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


