News May 18, 2024

தென்காசி குற்றாலம் அருவிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால், அருவிகள், மற்றும் அணைகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நேற்று பழைய குற்றாலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் பலியானார். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

தென்காசி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தென்காசி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <>கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News March 6, 2026

தென்காசியில் பரபரப்பை கிளப்பும் போஸ்டர்.!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்நிலையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் 15 வது பொதுமக்கள் சார்பாக என குறிப்பிடபட்டு குடிநீர் தர மறுக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் கோ பேக் உதயநிதி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் தென்காசி பகுதியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

News March 6, 2026

தென்காசியில் தொடரும் கொலைகளால் அச்சம்.!

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 30 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 5 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இவை பெரும்பாலும் மதுபோதை, குடும்ப தகராறு காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

error: Content is protected !!