News December 8, 2025

தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் பெறபட்ட விவரம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மனுக்களை பெற்ற்றார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை,  அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா  மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 449  மனுக்கள் பெறப்பட்டன. 

Similar News

News December 10, 2025

தென்காசி: கம்மி விலையில் கார், பைக் வேணுமா??

image

ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.12.2025ம் தேதி காலை 09 மணி முதல் மதியம் 03 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 94884-88933, 78688-61828 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 10, 2025

தென்காசியில் குடிநீர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

image

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் 7397 389 953 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும். இத்தகவலை நகர்மன்ற உறுப்பினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 9, 2025

தென்காசி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!