News September 12, 2025
தென்காசி: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தென்காசி, சுரண்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெனிக்ஸ் குமார் மற்றும் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யாபுரம் பகுதியில் செந்தில் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருமலைகுமார் என்ற பெரிய கட்டை என இரண்டு நபர்களை தென்காசி எஸ்.பி உத்தரவின் பேரில் ஆட்சியர் கமல் கிஷோர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு.
Similar News
News September 12, 2025
தென்காசி: ரூ.99 ஆயிரம் சம்பளத்தில் RBI வேலை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)-ல் 120 கிரேட் பி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்த நபர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சம்பளம் 55,200 – 99,750 வரை வழங்கபடுகிறது. செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இங்கு <
News September 12, 2025
தென்காசி பைக் விபத்தில் தொழிலாளி பலி

சுரண்டை அருகே கடையாலுருட்டி- சேர்ந்தமரம் இடையே பைக் விபத்தில் திருமலாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் (49) உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேர்ந்தமரம் போலீசார், தலையில் பலத்த காயத்துடன் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை.
News September 12, 2025
தென்காசி: 50% மானியத்தில் கிரைண்டர்!

தென்காசி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.