News May 1, 2024
தென்காசி: குடிநீர் சேவை கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
கிரஷர் மீண்டும் இயக்க அனுமதித்தால் போராட்டம் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பூலாங்குளத்தில் சிட்டிசன் கிரஷர் மீண்டும் இயக்கப்படுவதாக தகவல். இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைமையில், பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, அயோத்தியாபுரி, ராமநாதபுரம் கிராம மக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, விவசாய நிலங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
News August 24, 2025
இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

தென்காசி மாவட்டத்தில் இன்றிரவு (ஆக.24) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம், மேலும் நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.
News August 24, 2025
தென்காசி: அரசு பேருந்து விபத்து & 25 பேர் காயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி பாலத்தில் அரசு பேருந்து, கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்து புளியமரத்தில் மோதிய விபத்தில், 23 பயணிகள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புளியங்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். சொக்கம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.