News December 15, 2025

தென்காசி: கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம்!

image

கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (32). திருமணமாகாத இவர் கடந்த 10-ம் தேதி திடீரென மாயமானார். எனவே உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில், நேற்று அப்பகுதி கிணற்றில் முத்துக்குமார் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முத்துகுமார் உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவர் இறப்பு தற்கொலையா? கொலையா என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

தென்காசி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

தென்காசியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 15, 2025

தென்காசி: விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

image

தென்காசி மாவட்டம் ஏமம்பட்டியை சோ்ந்தவா் தொழிலாளி சரவணன் (42). இவர் மனைவி மாணிக்கச் செல்வி, சக தொழிலாளி பாாவதி ஆகியோரை நேற்று டூவீலரில் ஏற்றிக்கொண்டு ஏமம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தேசியம்பட்டி விலக்கு பகுதியில் எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாசுதேவநல்லூா்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!