News November 20, 2024
தென்காசி காவல்துறை ரோந்து விபரம்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
தென்காசி: டீ கப் திருடிய டிக்டாக் பிரபலங்கள்!

இன்ஸ்டாகிராம் பிரபலம் பேபி சூர்யா, சித்திக் குத்துக்கல்வலசை பகுதியில் கருப்பட்டி காப்பி கடையில் டீ குடித்துவிட்டு டீ கப்பை திருடி செல்வது போல உரையாடியபடி ஒற்றைக் கையில் காரை இயக்கி வீடியோ வெளியிட்டனர். இவ்வீடியோ வைரலாகிய நிலையில், தவறான முன்னுதாரணமாக விளங்குவதாக டீ கடையின் உரிமையாளர் ரவுடி பேபி மற்றும் அவரது கணவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
News December 23, 2025
தென்காசி: டூவீலர் விபத்தில் பலி!

ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ ராம்குமார் (36). இவர் ஆலங்குளத்தில் தனியார் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் தென்காசி – நெல்லை சாலையில் வண்ணநாதபுரம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
தென்காசி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தென்காசி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <


