News January 2, 2026
தென்காசி: கார் மோதி சம்பவ இடத்தியிலே பலி

தென்காசி ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தை சேர்ந்தவர் அருள்ராம நவநீதகிருஷ்ணன் (63). இவர் நேற்று சாலையை கடக்க முயன்ற பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரக்கேரளம்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக நெல்லை டவுணை சேர்ந்த ஹரிஷ் மாதவன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 2, 2026
தென்காசி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News January 2, 2026
தென்காசி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

தென்காசி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 2, 2026
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு.. முக்கிய மாற்றம்!

செங்கோட்டை தாம்பரம் விரைவு ரயில் இன்று முதல் புதிய கால அட்டவணையில் இயக்கப்படுகிறது. இதன்படி, செங்கோட்டையில் இருந்து மாலை 4.30 மணிக்கு பதில் 5.35 மணிக்கு ரயில் புறப்படும். மறுநாள் காலை 7.25க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்கத்தில் தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு பதில் 8.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 9 மணிக்கு பதில் 8.50 மணிக்கு வழக்கம் போல் செங்கோட்டைக்கு 10.50 மணிக்கும் செல்லும்.


