News December 5, 2025

தென்காசி: கல்வி உதவி தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் மூலம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்; <>https://umis.tn.gov.in/ <<>>என்ற இணையதளம் மூலம் டிச 31க்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 6, 2025

ஆலங்குளம்: போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு! 2 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டு முருகன் என்பவரை இரு நபர்கள் அரிவாளால் வெட்டினர். போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டியதாக பொத்தையை சேர்ந்த இசக்கி பாண்டி (28) அவரது நண்பர் பேச்சி துரை (19) ஆகிய இருவரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

News December 6, 2025

தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 6, 2025

டிச.13ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 13.12.2025 அன்று புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 10000-க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளன. கூகுள் படிவம்: https://forms.gle/5Kzi9zpDTa7Mi9jc6

error: Content is protected !!