News May 8, 2025
தென்காசி கலை கல்லூரியில் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (மே.08) அழைப்பு விடுத்துள்ளார் .
Similar News
News September 27, 2025
தென்காசி எம்.பி-க்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்

2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திமுக தேர்தல் பொறுப்பாளராக தென்காசி எம்.பி., டாக்டர். ராணி ஸ்ரீகுமார்-ஐ நியமனம் செய்யபட்டு உள்ளார். இன்று மாநில வர்த்தக அணி நிர்வாகி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி கேபிள் கணேசன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News September 27, 2025
தென்காசி மக்களே உங்க பகுதில குடிநீர் வருதா??

தென்காசி மாவட்டத்தில் 13521 குடிநீர் இணைப்புகள் கொடுக்கபட்டு குடிநீர் 2 -3 நாட்கள் ஒரு முறை வழங்கபட்டு வருகிறது. புதிய வீடுகளுக்கு – ரூ.6000 இணைப்பு வழங்கபடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் குடிநீர் வராமல் இருந்தாலோ (அ) குடிநீர்க்கு அதிக கட்டணங்கள் வசூலித்தாலோ தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633-222228 தெரியபடுத்துங்கள். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க..
News September 27, 2025
தென்காசி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.