News October 19, 2025

தென்காசி: கட்டட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி

image

செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கோட்டையில் உள்ள வீட்டில் கட்டுமான பொருட்கள் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் இடிபாடுகளில் சிக்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த செங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News October 19, 2025

தென்காசியில் தொடர் மழை; குண்டாறு அணை நிரம்பியது

image

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தென்காசியில் 99 மி.மீ., ஆய்க்குடியில் 96 மி.மீ., செங்கோட்டையில் 96 மி.மீ., குண்டாறு அணைப்பகுதியில் 88 மி.மீ., சிவகிரியில் 75 மி.மீ., ராமநதியில் 86 மி.மீ., மழை பதிவானது. 36 அடி உயரமுள்ள செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

News October 19, 2025

குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது . மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News October 19, 2025

BREAKING: கடையநல்லூரில் நாய் கடி பிரச்சினை பரபரப்பு போஸ்டர்

image

தென்காசியில், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள், முதியோர், மற்றும் மாணவ மாணவிகளை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுபடுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று பாஜக சார்பில் நாய்களை கட்டுபடுத்த கோரியும் நிவாரண உதவி வழங்கவும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!