News September 27, 2025
தென்காசி எம்.பி-க்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்

2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திமுக தேர்தல் பொறுப்பாளராக தென்காசி எம்.பி., டாக்டர். ராணி ஸ்ரீகுமார்-ஐ நியமனம் செய்யபட்டு உள்ளார். இன்று மாநில வர்த்தக அணி நிர்வாகி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி கேபிள் கணேசன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News January 25, 2026
ஆலங்குளம் அருகே திமுக நிர்வாகி கைது!

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் முருகன் (52). இவருக்கும் சில்வார்குளம் பகுதியில் செயல்படும் காற்றாலை நிறுவனத்திற்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காற்றாலை மேலாளர் பாலாஜிக்கும், கதிர்வேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கதிர்வேல், பாலஜியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர்.
News January 25, 2026
தென்காசி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தென்காசி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News January 25, 2026
தென்காசி: கர்ப்பிணி பெண் தற்கொலை!

சிவகிரி அருகே ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (23). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் நேற்று முந்தினம் தனது பெற்றோர் வீட்டில் தூங்க சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், வாசு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்


