News August 5, 2025

தென்காசி: இவ்வளவு சதவீத மழையா நம்ம ஊர்ல?

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் பெய்த கனமழையால் தென்காசியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணபடுகிறது. மேலும் நமது தென்காசி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் இயல்பை விட 107 மி.மீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

Similar News

News August 5, 2025

தென்காசி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று கருவந்தா சி.எஸ்.ஐ மண்டபத்திலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சிக்கான முகாம் நடுவக்குறி .பி.ஆர்.சி கட்டிடத்திலும், நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கமல கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News August 5, 2025

தென்காசி கூட்டுறவு வங்கியில் வேலை… JOB ALERT!

image

தென்னாசி இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க ஒருவருக்காவது கண்டிப்பாக உதவும்.

News August 5, 2025

தென்காசி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பற்றித் தெரியுமா?

image

தென்காசி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <>இதில்# பயன்பெறலாம்<<>>. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!