News January 22, 2026

தென்காசி இளைஞர்களே நாளை (ஜன 23) மிஸ் பண்ணாதீங்க

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 23.02.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல வாய்ப்பினை வேலை நாடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

தென்காசி : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

தென்காசி மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இங்கு <>கிளிக் <<>>செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த மாதம் பருப்பு , எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை
SHARE பண்ணுங்க.

News February 4, 2026

தென்காசி: பாலியல் வழக்கில் பள்ளி தாளாளர் கைது

image

தென்காசி, பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளர் செல்வசௌந்தர பாண்டியன் மீது, பாலியல் புகார் தெரிவித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை சிறுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் பள்ளி நிர்வாகியை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்.

News February 4, 2026

தென்காசி மாவட்டத்தில் 499 பேர் கைது!

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்ஙன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 488 பெண்கள் உட்பட 499 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!