News December 29, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.28 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

தென்காசி: கார் மோதி சம்பவ இடத்தியிலே பலி

image

தென்காசி ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தை சேர்ந்தவர் அருள்ராம நவநீதகிருஷ்ணன் (63). இவர் நேற்று சாலையை கடக்க முயன்ற பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரக்கேரளம்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக நெல்லை டவுணை சேர்ந்த ஹரிஷ் மாதவன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

தென்காசி மாவட்டத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

தென்காசி மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.?

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!