News January 3, 2026
தென்காசி: இன்று எங்கெல்லாம் பவர் கட்?

தென்காசி மாவட்ட மக்களே இன்று (ஜன.3) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காலை 9 முதல் 2 மணிவரையிலும், சில இடங்களில் மாலை 5 மணி வரையிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, செங்கோட்டை சங்கரன்கோவில், கடையம் சம்பவர் வடகரை , சுரண்டை, புளியங்குடி ஆலங்குளம் கீழப்பாவூர் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
Similar News
News January 31, 2026
தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் வசந்த் (30). சவுண்ட் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு எதிர்பாராத விதமாக அவர் வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 31, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (30-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News January 30, 2026
57 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

தென்காசி மாவட்டவிவசாயிகள் பயன்பெற வேண்டி 57 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைங்களை திறப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கேற்ப ஒப்புதல் பெறப்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைங்களட திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்ற விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்தார்.


