News December 23, 2025

தென்காசி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

தென்காசி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News December 26, 2025

தென்காசி: கழிவு நீரோடையில் சடலம் மீட்பு!

image

சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் பிரபாகரன் (27), சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடிக்கு வந்தார். சிந்தாமணி பகுதியில் உள்ள கழிவுநீரோடையில் உடலில் காயங்களுடன் நேற்று முன் தினம் இரவு இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த புளியங்குடி போலீஸார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசாதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 26, 2025

தென்காசி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

தென்காசி மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0462-2573017 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க

News December 26, 2025

தென்காசி: அரசு பேருந்தில் பிரேக் கோளாறால் விபத்து…

image

அம்பையில் இருந்து கடையம் அருகே உள்ள பெத்தாபிள்ளை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கடனாநதி அருகே சென்ற போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் அன்பரசனின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் பார்வதி (67), சூரியகவி (65), அமராவதி (67), ஜானகி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!