News December 18, 2025

தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

தென்காசியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (19-ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

News December 18, 2025

தென்காசி வேலை தேடுவோர் நாளை மறக்காதீங்க!

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச.19) அன்று காலை 10 மணி முதல் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து இம்முகாமில் நேரடியாக கலந்துகொள்ளலாம். இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 18, 2025

தென்காசி: பெண்களுக்கு அரிய வாய்ப்பு

image

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை இலத்தூர் மெயின் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிச.22ம் தேதி முதல் தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த பின்பு மத்திய அரசின் சான்றிதழ்களும் வழங்கப்படுவதால் கிராமப்புற பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE!

error: Content is protected !!