News December 25, 2025
தென்காசி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE பண்ணுங்க.
Similar News
News December 26, 2025
தென்காசியில் இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, ஆவுடையம்மாள்புரம் சுடலை முத்து என்பவரின் மகன் அஜித்குமார் (28) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டது. எஸ்.பி பரிந்துரையின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 26, 2025
தென்காசி மக்களே., இது தான் கடைசி வாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <
News December 26, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.25 இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


