News October 10, 2025
தென்காசி: ஆட்டோ மீது பைக் மோதி ஒருவர் பலி

தென்காசி, கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ஜீவா (22) மற்றும் முத்துக்குமார் (25) ஆகியோர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகின்றனர். வி.கே.புரத்தில் இருந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது ஆழ்வார்குறிச்சி மெயின் ரோட்டில் ஆட்டோ மீது பைக் மோதியதில் ஜீவா பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News October 10, 2025
தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விரைவாக செயல்படுத்தக்கூடிய 3 அத்தியாவசிய தேவைகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். நாளை மாலையே அரசின் இணையத்தில் பதிவு செய்து, ‘நம்ம ஊரு நம்ம அரசு’ என்ற பெயரில் குறைந்த காலத்தில் தீர்வு காணப்படும். தெருக்களில் உள்ள ஜாதிப்பெயரை நீக்குவது பற்றியும் ஆலோசனை செய்யப்படும். பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யவும் ஆட்சியர் கமல் கிஷோர் அறிவுரை.
News October 10, 2025
தென்காசி: முதல்வர் வருகை – அமைச்சர் ஆய்வு

தென்காசியில் அக். 24, 25ம் தேதி நடைபெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தருகிறார். நிகழ்வு நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இதில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் ஹபீபுர்இளைஞரணி, துணை அமைப்பாளர்கள் முகமது அப்துல்ரகீம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News October 10, 2025
தென்காசி: கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி – கணவன் பலி

கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் போஸ் (49). இவரது நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து கணவன் போஸ் மீது வெந்நீரை அவரது மனைவி ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த போஸ் நேற்று அக் 10ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.