News March 26, 2024

தென்காசி ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 25, 2025

வேளாண் வணிக திருவிழாவில் கலந்து கொள்ளலாம் – ஆட்சியர்

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 27.09.2025 அன்று காலை 10:30 மணியளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழாவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதால் விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் வணிகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தகவல்.

News September 25, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டத்தில் 2025 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8834 ஹெக்டர், சிறுதானியங்கள் 4365 ஹெக்டர். பயறு வகைகள் 530 ஹெக்டேர் பருத்தி 592, கரும்பு 662 ஹெக்டர், எண்ணெய் வித்து 1044 ஹெக்டேர். பழங்கள் 9716 ஹெக்டேர், காய்கறிகள் 2582 ஹெக்டேர். வாசனைப் பயிர்கள் 497 ஹெக்டேர், மலைப்பயிர்கள் 13794 ஹெக்டேர். பூக்கள் 461 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.

News September 25, 2025

தென்காசியை சேர்ந்தவருக்கு கலைமாமணி விருது

image

தென்காசி, கீழப்பாவூர்  வட்டார கிராமிய வில்லிசை கலைஞர்களின் முன்னேற்ற சங்க தலைவரான  மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் ஜெகநாதன் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மாவட்ட அளவில் கலை சுடர்மணி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

error: Content is protected !!