News October 25, 2024
தென்காசி அருகே ரயிலில் பாய்ந்து டிரைவர் தற்கொலை

தென்காசி மாவட்டம், மேட்டூர் ரயில்வே நிலையத்திற்கு இடையே கணக்கு நாடார்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் அயோத்தி என்பவர் ரயில் முன்பு பாய்ந்து இன்று(அக்.,25) அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீசார், உதவி ஆய்வாளர் மாரித்து தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
தென்காசி- குருவாயூர் ரயில் சேவையில் நாளை மாற்றம்

சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக மதுரை – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 16 327) நாளை 20ஆம் தேதி கொல்லம் முதல் குருவாயூர் வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. கொல்லத்துடன் இந்த ரயில் நிறுத்தப்படும். திருவனந்தபுரம் கோட்டத்தில் தற்போது நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News September 18, 2025
தென்காசியில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அலுவலர்களும் உடனிருந்தனர். இந்த ஆய்வு, திட்டங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாக உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
News September 18, 2025
தென்காசி: கழிவுநீர் வாறுகாலில் கிடந்த ஆண் சடலம்

தென்காசி நகராட்சிக்குட்பட்ட மையபகுதியான போஸ்ட் ஆபீஸ் எதிர்ப்புறம் பழைய பரதன் தியேட்டர் அருகே உள்ள கழிவுநீர் வாறுகாலில் ஆண் சடலம் மிதந்தது. இறந்த நபர் யார்? கொலையா தற்கொலையா என சிசிடிவி காட்சிகள் கொண்டு தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி காணபட்டது.