News June 12, 2024
தென்காசி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

தென்காசி, வி.கே.புதூர் வட்டத்தில் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் மூலம் தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் வருகிற 19ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வி.கே.புதூர் சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
Similar News
News September 15, 2025
தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் 530 மனுக்கள் பெறப்பட்டன

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.15) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டது.
News September 15, 2025
தென்காசிக்கு வருகை தரும் முதலமைச்சர்

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அடுத்த வாரத்தில் எந்த தேதியில் கலந்து கொள்வார் என்பது தெரியவரும் என்றார்.
News September 15, 2025
தென்காசி : பட்டாவில் திருத்தமா??

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!