News December 26, 2025
தென்காசி: அரசு பேருந்தில் பிரேக் கோளாறால் விபத்து…

அம்பையில் இருந்து கடையம் அருகே உள்ள பெத்தாபிள்ளை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கடனாநதி அருகே சென்ற போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் அன்பரசனின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் பார்வதி (67), சூரியகவி (65), அமராவதி (67), ஜானகி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 2, 2026
தென்காசி: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News February 2, 2026
தென்காசி: அடுத்தடுத்து கார் மோதி இருவர் பலி

பாடத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் சனிக்கிழமை இரவு பாட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற போது அதை ஊரை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் ஓட்டி வந்த கார் கண்ணன் மீது மோதியது. பின்னர் மலையான்குளம் நோக்கி டூவீலரில் சென்ற மகேந்திரன் (35) மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் GH -ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.
News February 2, 2026
தென்காசி: போஸ்ட் ஆபிஸில் 2019 காலியிடங்கள்., NO EXAM

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <


