News March 18, 2026
தென்காசி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் குற்றங்களுக்கு தீர்வு – MLA

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் MLA கிருஷ்ணமுரளி கலந்து கொண்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் வேகப்படுத்தவில்லை. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குற்றச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.
Similar News
News April 7, 2026
தென்காசி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News April 7, 2026
தென்காசி: பைக் மோதிய விபத்தில் முதியவர் பலி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், காமராஜ் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த மர வேலை செய்து வந்த சோமசுந்தரம் (70) , கீழப்பாவூர் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சைக்கிளில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 19 வயது கல்லூரி மாணவர் ராம்குமார் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 7, 2026
ஆலங்குளம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் மணிகண்டன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனர்.


