News February 26, 2025

தென்காசி அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்ட முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலக அலுவலங்களிலும், சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டமானது நாளை (26.2.25) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு புதிய கணக்கை தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. SHARE IT.

Similar News

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 8, 2025

தென்காசியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

image

தென்காசி, சங்கரன்கோவில் அருகே நெடுங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (விவசாயி). நேற்று இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் மாரியப்பன் காலில் கடித்தது. உடனே அவரது உறவினர்கள் மாரியப்பனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News July 7, 2025

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் – ஆட்சியர்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் ஜுலை 2025 மாதம், இரண்டாவது செவ்வாய்கிழமை நாளை (08.07.2025) தென்காசி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. குறைகேட்பு முகாமிலும் ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

error: Content is protected !!