News November 10, 2025
தென்காசியில் 74.84 % விண்ணப்ப படிவம் வழங்கல்

தென்காசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) 04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர். இதுவரை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து. 09.11.2025-ம் தேதி காலை 08.00 மணி நிலவரப்படி மொத்தம் 13,75,091 மொத்த வாக்காளர்களில் 10,29,175 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 74.84 % சதவீதம் வழங்கபட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
சீருடை பணியாளர் தேர்வு பாதுகாப்பு பணியில் காவல்துறை

(நவ.9) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் , சிறை காவலர் , தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வு மாவட்டத்திலுள்ள 8 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு காவல்துறை தலைவர் சந்தோஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 800 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
News November 9, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான தென்காசி, ஆலங்குளம் சங்கரன்கோவில் புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று (09.11.25) காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
தென்காசியில் 10 பைக்குகள் எரிந்து நாசம்

சங்கரன்கோவில் சேர்ந்த முருகேசன் இவர் இலவன்குளம் சாலையில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை 2- மணி அளவில் திடீரென கடையின் தீப்பற்றி 10-க்கு மேற்பட்ட வாகனம் எரிந்துள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


