News October 12, 2025
தென்காசியில் வெளுத்து வாங்கும் மழை!

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே சென்னை முதல் குமரி வரை என பல்வேறு மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் சில நேரங்களில் வெயிலும் சில நேரங்களில் மழையும் என மாறி மாறி கிளைமேட் இருந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்காசி மக்களே வீட்டில இருங்க.. SHARE!
Similar News
News October 12, 2025
தென்காசி: மனமகிழ் மன்றம் திறப்பதை எதிர்த்து போஸ்டர்

பாவூர்சத்திரம் மற்றும் கீழப்பாவூர் பகுதிகளுக்கு தொழிற்சாலைகளை கொண்டு வராமல் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடங்களை கொண்டு வரும் திட்டத்தை கைவிடுங்கள். நான்கு வழிச்சாலையில் வரவிருக்கும் மதுக்கடையின் அனுமதியை ரத்து செய்து நிரந்தரமாக மூடுங்கள் எங்களை போராடத் தூண்டாதீர்கள் என்று சிவகாமிபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் பாவூர்சத்திரம் நகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
News October 12, 2025
தென்காசி: தெரு நாய் தொல்லை அதிகமா…போன் பண்ணுங்க..!

நமது தென்காசி மாவட்டத்தில் தெருநாய் கடி அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர், எனவே உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633 222228 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News October 12, 2025
தென்காசியில் அக். 17இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அக்டோபர் 17ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 8, 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ தகுதி உடையோரை தேர்வு செய்யும். பதிவு குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் செய்ய வேண்டும். வேலை பெற்றாலும் அலுவலகப் பதிவு மூப்பு பாதிக்காது.