News June 11, 2024
தென்காசியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மின் பெயர் பொறியாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் நார் கூட்டம் நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமை தாங்கி பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகம் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 25, 2025
தென்காசி SBI-ல் வேலை.. நாளை கடைசி!

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் <
News August 25, 2025
தென்காசியில் இனிமே ரிஜிஸ்டர் ஆபீஸ் போக வேணாம்!

தென்காசியில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த பத்திரப்பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
தென்காசி ரயில்கள் ரத்து அறிவிப்பு!

தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக, ரயில் எண்.16845 (ஈரோடு – செங்கோட்டை) ஆகஸ்ட் 27-30 வரை ஈரோடு – திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும், ரயில் எண்.16846 (செங்கோட்டை – ஈரோடு) ஆக.28-31 வரை செங்கோட்டை – திண்டுக்கல் ரத்து, மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் 06845/06846 இயக்கப்படும். ரயில் எண்.16848 (செங்கோட்டை-மயிலாடுதுறை) ஆக.28 – செப்.3 வரை சில நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.