News March 30, 2025
தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

நாளை (மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல்2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்ரல்5 வரை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News April 1, 2025
தென்காசி: கடன் தொல்லை தீர்க்கும் கோயில்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மலை உச்சியில் ஒக்க நின்றான் பொத்தையில் ராமர் சீதாதேவி அருள்பாலிகின்றனர். சீதாதேவியை தேடி, ராமன் ஒற்றை காலில் நின்று சீதையைத் தேடி நின்ற பகுதிதான் ஒக்க நின்றான் பொத்தை என்று அழைக்கப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறப்பான தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. *கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணவும்*
News April 1, 2025
சங்கரன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சங்கர நாராயணசாமி மற்றும் கோமதி அம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. இவ்விழா 48 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 1, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (மார்ச்-31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.