News April 14, 2025

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 23, 2025

தென்காசி: அங்கன்வாடியில் வேலை.. இன்றே கடைசி

image

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். Share It.

News April 23, 2025

குத்துக்கல்வலசை பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

தென்காசியில் இருந்து பண்பொழி போகும் ரோட்டில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அடையாளமாக வைக்கப்பட்ட பிறகு இங்குள்ள கிராமத்திற்கு குத்துக்கல்வலசை கிராமம் என்ற பெயர் வந்தது. இப்பகுதியில், வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல் வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தமாகும். உங்க கருத்தை பதிவிட்டு Share பண்ணுங்க.

News April 22, 2025

தென்காசி: வாகனங்கள் ஏலம் ஆட்சியர் தகவல்

image

தென்காசி அலகு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 26. காலை 11.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை ஏலம் நடத்தப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 23.04.2025 முதல் 25.04.2025 வரையிலான நாட்களில் தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் கட்டுப்பாட்டின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்

error: Content is protected !!