News June 5, 2024
தென்காசியில் மக்கள் நீதிமன்றம் நடத்த ஏற்பாடு

தென்காசி மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் வருகிற 8ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள்,தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை உள்ளிட்டவை சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
தென்காசி: இலவச தையல் மிஷின்.! உடனே APPLY பண்ணுங்க!

தென்காசி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க
News August 29, 2025
BREAKING : தென்காசியில் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி பகுதியில் விநாயகர் சதுர்த்தியில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. இதனால், தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
தென்காசி மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

தென்காசி மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <