News January 26, 2026
தென்காசியில் பைக்கிற்கு தீ வைத்த இருவர்!

கடையநல்லூர் அருகே கீழ திருவேட்டநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தபோது தீயிட்டு எரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சொக்கம்பட்டி போலீசார் விசாரித்தனர். முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (22), பசுபதி பாண்டியன் (22) ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை.
Similar News
News January 26, 2026
தென்காசி: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

தென்காசி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
தென்காசி காட்டு பகுதியில் ஒருவர் மர்ம மரணம்!

தென்காசி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (40), காற்றாலை மின்மாற்றி வளாகத்தில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடைமைகள் சிதறிக் கிடந்த நிலையில், சேர்ந்தமரம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை.
News January 25, 2026
தென்காசி : 12th போதும்..அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


